வியாழன், 30 ஜனவரி, 2025

I love you அத்தான்

பெரிய குடியிருப்பில் குடியிருக்கும் பெண்கள் எல்லாம் மாதந்தோறும் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் தலைவி அனைவருக்கும் ஒரு போட்டி வைத்தார் .யார் தமது கணவருடன் அன்பாக, பாசமாக, புரிதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாரோ அவருக்கு பரிசு என்று.

அவரவர் அலைபேசியை எடுத்துக் கொள்ளுங்கள். அவரவர் கணவருக்கு அத்தான் ஐ லவ் யூ அத்தான்! என்று செய்தி அனுப்புங்கள் .யாருக்கு மிகச் சிறந்த பதில் வருகிறதோ அவர் வெற்றியாளர் என்றார்.

உடனே அனைத்து பெண்களும் அவரவர் கணவருக்கு அத்தான்! ஐ லவ் யூ அத்தான்! என்று செய்தி அனுப்பினார்கள். மறுமுனையில் இருந்து ரிப்ளை வர துவங்கியது.

1. இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு?

2. என்ன தப்பு பண்ணினாய்?

3. கார கொண்டு போய் எங்கேயாச்சும் இடிச்சுட்டியா?

4. சொல்லு வரும்போது என்ன வாங்கிட்டு வரணும்?

5 உங்க அம்மா வீட்டுக்கு போகணுமா ?கால் டாக்ஸி புக் பண்ணிக்கோ/

6.ரீசார்ஜ் போட்டு விடுறேன்

7. கண்டிப்பா காய்கறி வரும்போது வாங்கிட்டு வரேன்.

8. டெய்லர் கடையில் ஜாக்கெட் வாங்கிட்டு வந்துடறேன் கோபப்படாத! என்று அடுத்தடுத்து வந்தது.

கடைசியாக ஒரு பெண்ணுக்கு வந்த செய்தி! ஹலோ சார் யார் நீங்க? என் மனைவி அலைபேசி உங்க கைக்கு எப்படி வந்தது?ஏன் இப்படி மெசேஜ் பண்றீங்க?

நீதி: ஏம்மா? நீங்கள் எல்லாம் கணவன் கிட்டே அன்பா நடந்துகிட்டா நாங்கள் எல்லாம் ஏன் அடுத்த பெண்கள்கிட்ட கனிவா நடந்து கடலையை போடப் போறோம்?

இன்னிக்கெல்லாம் கல்யாணமான கொஞ்ச காலத்துல அன்பையும் காணோம்.

அத்தானையும் காணோம்.

என்னமோ போங்க!

திங்கள், 25 நவம்பர், 2024

அம்மா பசிக்கிறது...

எங்கள் வீட்டிற்கு இன்று காலை 8 மணிக்கு வயதான தாத்தா ஒருவர் வந்தார், "அம்மா பசிக்கிறது. சாப்பாடு இருந்தால் கொஞ்சம் போடுங்க" என்றார்.

"10 நிமிடம் இங்கயே உட்காருங்க.. சாப்பாடு கொண்டு வரேன்" என்று சமையலறைக்குள், சென்று காலை மெனு இட்லி - சட்னி. அவசர அவசரமாக தயார் செய்து, உணவு பரிமாற எடுத்துகொண்டு வெளியே வந்தேன்.

10 நிமிடத்தில் எங்கள் வீட்டை சுற்றியுள்ள குப்பை, ,புல் மற்றும்

தேவையற்ற செடிகளை கையாலேயே பிடுங்கி சுத்தம் செய்துகொண்டு இருந்தார். மனம் கலங்கியது...

என் தாத்தாவை விட பெரியவராக இருப்பார். நடக்கவும் முடியவில்லை,

கை,கால் நடுக்கம் வேறு. "தாத்தா இங்கே வாங்க", என்று கூறியதும் சாப்பிட அமர்ந்து "2 இட்லி போதும் வயதாகிவிட்டது அதிகமா சாப்பிட முடியவில்லை" என்றார்.

2 இட்லி சாப்பிடவா வீட்டை சுற்றி சுத்தம் செய்து சாப்பாடு கேட்கிறார். மிகவும் வருத்தமாக உள்ளது.

உங்களுக்கு உணவு அளித்து பாதுகாத்த தாய், தந்தையை வீதியில் விட்டுவிடாதீர்கள்.

தாத்தா சாப்பிட்டு விட்டு கிளம்பும்போது அவரது கையில் 100 ரூபாய் கொடுத்ததும் மகிழ்ச்சியில் "
இன்னொரு நாள் வரேன்.. வேலை ஏதாச்சும் இருந்தால் சொல்லுங்க, செஞ்சிட்டு போறேன்" என்றார்.

"உழைக்காமல் எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை" என்றார்.

வீட்டின் வெளியே சுத்தம் செய்து உணவு கேட்கும் தாத்தாவின் நேர்மை

மனம் சிலிர்க்க வைத்தது.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

அம்மாவின் கைப்பக்குவம்



மனைவி 🌿
ஒருநாள் தன் கணவனுக்குப்
பிடித்த குழம்பு சமைத்தாள்.
இன்று எப்படியும் பாராட்டு வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்.

தெரு முழுதும் குழம்பு வாசனை.
கணவன் வந்ததும் வேகமாக சாப்பிட
அமரச் சொன்னாள்,
மனைவி சாப்பாடு பரிமாறினாள்.
" என்னங்க குழம்பு எப்படி இருக்கு ?
" நல்லா இருக்கு ஆனாலும் எங்கம்மா
கைப் பக்குவம் உனக்கு இல்ல...
எங்கம்மா வைப்பாங்க பாரு குழம்பு
தெருவே மணக்கும்... அப்பப்பா...
ருசி
சூப்பரா இருக்கும். 
அம்மா குழம்பின் ருசியை பாராட்டி கணவர் எழுந்தார்.

மனைவிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
தன் கணவன் குழம்பின் ருசியை பாராட்டததை நினைத்து,
எப்ப பாரு "அம்மா...
அம்மான்னு அவரு அம்மாவைத்தான் தூக்கி வச்சு பேசுவாரு என்று முணுமுணுத்தாள்.

அப்போது அவளுடைய மகன் சாப்பிட வந்தான். மகன் ஒருவாய் சாப்பிட்டு விட்டு அம்மாவை பாராட்ட ஆரம்பித்தான்.
அம்மா "சூப்பர்மா " எப்படிம்மா இப்படி சமைக்கறீங்க ? தெருவே மணக்குது.
உங்க அளவுக்கு யாராலயும் குழம்பு வைக்க முடியாதும்மா " என பாராட்டினான்.
அவளுக்குப் புரிந்தது... ஒரு மகன் யார் கையில் சாப்பிட்டாலும் தன் தாயின் சமையலைத்தான் அதிகம் பாராட்டுவான் என்று.

நம் மகனும் அம்மா, அம்மா என்றுதானே
உயர்த்திப் பேசுகிறான். 
மகன் பேசுவது தவறில்லை என்றால் கணவன் பேசியதும் தவறில்லை தான். என்று புரிந்து கொண்டாள்.

https://youtube.com/@santirathan?si=ywXNeH6-GvVPmiXk

புரிந்து கொள்ளும் ஒரு மனைவி இருந்தால் அவளும் அம்மாதான் கணவனுக்கு.